எதற்காக நாளை இப்படியொரு மாபெரும் வேலைநிறுத்தம்?- இயல்பு வாழ்வை பாதிக்கும் பாரத் பந்த்!

நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.


நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அதேசமயம் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் வேலையின்மை அதிகரித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.


பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதனால் விலைவாசி உயர்விற்கு ஏற்ப வாழ்வாதாரத்தை கட்டமைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசின் நடவடிக்கையில் திருப்தி ஏற்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.